Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

By: vaithegi Fri, 16 June 2023 11:31:30 AM

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

சென்னை:கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த வந்த நிலையில் இன்று ஒரே அடியாக உயர்ந்து உள்ளது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் கழகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு ..

சென்னையில் ஆபரண தங்கத்தின் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,550 -க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை,சென்னை ,தங்கத்தின் விலை,சென்னை

அதேபோன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலை நிலவரப்படி சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து, ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகியது.

மேலும் 1 கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 அதிகரித்து 1 கிராம் 5,542 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ. 296 அதிகரித்து 1 சவரன் ரூ.44,336 ஆகவும் அதிகரித்துள்ளது.

Tags :