Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

By: vaithegi Mon, 31 Oct 2022 2:41:37 PM

ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.

jewelery gold,chennai ,ஆபரணத் தங்கம்,சென்னை

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 11 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5,144 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41,152 எனவும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு, ரூ.63 ஆகவும், கிலோவுக்கு ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :