Advertisement

ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு இவ்வளவு அதிகரிப்பு

By: vaithegi Sat, 11 Feb 2023 11:07:18 AM

ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு இவ்வளவு அதிகரிப்பு

சென்னை: கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடி ஏற்றத்தை சந்தித்து கொண்டு வருகிறது. அவ்வப்போது சற்று இறக்கம் காட்டினாலும், தொடர்ந்து உயர்ந்து கடந்த 2-ம் தேதி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. அன்றைய தினம் மட்டும் சவரன் ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது.

இதையடுத்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், இந்தாண்டு இறுதிக்குள் ரூ. 48 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இது நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

gold,increase ,தங்கம் ,அதிகரிப்பு

நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து 1 சவரன் ரூ.42,560க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5340க்கும் விற்கப்படுகிறது.

அதேபோன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.42,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 72.70க்கும், ஒரு கிலோ ரூ. 72,700க்கு விற்பனையாகிறது.

Tags :
|