Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 குறைவு

By: vaithegi Mon, 03 Apr 2023 2:23:11 PM

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 குறைவு

சென்னை:வெகு நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி .... தமிழகத்தில் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஆபரணத்தங்த்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 சரிந்துள்ளது.

இதனையடுத்து இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. ரூ.44,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold price,chennai ,தங்கத்தின் விலை, சென்னை

அதே போன்று 1 கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.5,535க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் ஒரு ஒரு கிராமுக்கு ரூ. 20 காசுகள் குறைந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.77,100க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த வாரங்களில் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் இத்தருணத்தை பயன்படுத்தி நகைப்பிரியர்கள் தங்க ஆபரணங்களை வாங்க முற்பட்டு கொண்டு வருகின்றனர்.

Tags :