Advertisement

ஆபரண தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை

By: vaithegi Tue, 28 Nov 2023 11:24:13 AM

ஆபரண தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதே விலையில் நீடிக்கிறது.இதையடுத்து கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிகரித்து உள்ளது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது.

sale,price of jewelery gold ,விற்பனை ,ஆபரண தங்கத்தின் விலை


இதேபோல் 1 கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மாற்றமின்றி நேற்றிய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.81.50-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|