Advertisement

எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

By: vaithegi Sun, 09 Apr 2023 3:18:04 PM

எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

சென்னை: தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் உயர்வு ....இந்தியா தனது ஒட்டு மொத்த பெட்ரோல் டீசல் தேவையை பூர்த்தி செய்ய அயல் நாட்டை சார்ந்து உள்ளது. இதனால் மற்ற நாடுகளில் எடுக்கப்படும் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி தொடர்பான முடிவுகள் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலையை பாதிக்கிறது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலருக்கு நிகராக அதிகரிக்கப்படும்சமயங்களில் நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் அதிகரிக்கப்படும்.

இந்த நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியான இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் விலை ஆனது முக்கிய மாற்றங்களை சந்தித்து உள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு அடைந்துள்ளது.

petrol,diesel,sales ,பெட்ரோல், டீசல்,விற்பனை

எனவே அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102. 63 க்கும், டீசல் விலை ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் பெட்ரோல் விலை ஆனது 0.29 காசுகள் அதிகரித்து ரூபாய் 94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று டீசல் விலையானது 0.38 காசுகள் உயர்ந்து ரூபாய் 95.05க்கு தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|