Advertisement

சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறு முகம்

By: vaithegi Thu, 19 Oct 2023 1:31:57 PM

சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறு முகம்

சென்னை:குறைவு எப்போது நிகழும் என்று பொதுமக்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர். ... பல்வேறு மருத்துவ குண நலன்களையும், சமையலில் தனி ருசியையும் சேர்க்கும் சின்ன வெங்காயத்திற்கு எப்பவுமே மவுசு சற்று அதிகமாகவே மக்கள் மத்தியில் இருந்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து கடந்த மாதம் வரை 1 கிலோ ரூபாய் 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர தொடங்கியுள்ளது.

சின்ன வெங்காயத்தின் விலை குறித்து வெங்காய வியாபாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

price of small onion,trader ,சின்ன வெங்காயத்தின் விலை,வியாபாரி

இதையடுத்து தற்போது 1 கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் வரத்து குறைவு காரணமாகவே விலை அதிகரித்து வருவதாகவும், தேவையான வரத்து வரத் தொடங்கியவுடன் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்திவுள்ளது.

Tags :