Advertisement

கார்த்திகை மாதத்தையொட்டி காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பு

By: vaithegi Tue, 21 Nov 2023 1:47:03 PM

கார்த்திகை மாதத்தையொட்டி காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பு


சென்னை: காய்கறிகளின் விலை கடும் உயர்வு ... கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட துவங்கிவிட்டனர். இந்த நிலையில், பெரும்பாலான வீடுகளில் சைவம் சமைப்பதனால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் பருவமழையின் தாக்கத்தினாலும் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்து கொண்டு வருகிறது.

vegetables price,karthik ,காய்கறிகளின் விலை,கார்த்திகை


அந்த வகையில், அவரைக்காய் கிலோ ரூ.60க்கும், நெல்லிக்கனி ரூ. 102க்கும், மக்காச்சோளம் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ. 35க்கும், கத்தரிக்காய் ரூ.25க்கும், முட்டைக்கோஸ் ரூ. 12க்கும், குடைமிளகாய் ரூ. 30-க்கும், கேரட் ரூ.38க்கும், காலிஃப்ளவர் ரூ. 20க்கும், சௌசௌ ரூ.20க்கும், தேங்காய் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, இஞ்சி கிலோவுக்கு ரூ. 250க்கும், பச்சை பட்டாணி ரூ. 150க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.35க்கும், பெரிய வெங்காயம் ரூ. 60க்கும், பீர்க்கங்காய் ரூ. 50க்கும், உருளைக்கிழங்கு ரூ.35க்கும், புடலங்காய் ரூ.40க்கும், தக்காளி ரூ.38க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Tags :