Advertisement

மழை ..தொடர்ந்து அதிகரிக்கும் காய்கறிகளின் விலை

By: vaithegi Fri, 15 Sept 2023 4:01:19 PM

மழை   ..தொடர்ந்து அதிகரிக்கும் காய்கறிகளின் விலை


சென்னை: தமிழகத்தில் தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதனால், காய்கறிகளின் விலை சற்று அதிரித்திருக்கிறது.

அதாவது, இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ. 30க்கும், பீட்ரூட் கிலோவுக்கு ரூ.30க்கும், குடைமிளகாய் கிலோவுக்கு ரூ.25க்கும், அவரைக்காய் கிலோவுக்கு ரூ.75க்கும், பட்டர் பீன்ஸ் கிலோவுக்கு ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

vegetables,farmers ,காய்கறிகள்,விவசாயிகள்

மேலும், சுரைக்காய் கிலோவுக்கு ரூ. 20க்கும், பாகற்காய் கிலோவுக்கு ரூ.20க்கும், பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.30க்கும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.60க்கும், முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.10க்கும், கேரட் கிலோவுக்கு ரூ.35க்கும், காலிபிளவர் கிலோவுக்கு ரூ.30க்கும், கொத்தவரை கிலோவுக்கு ரூ.25க்கும்,

மேலும் முருங்கைக்காய் கிலோவுக்கு ரூ.20க்கும், கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ.25க்கும், பச்சை கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.30க்கும், பெரிய கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.50க்கும், பீன்ஸ் கிலோவுக்கு ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஓரிரு நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளது.

Tags :