Advertisement

ஒரு மெட்ரிக் டன் கோதுமை விலை 1.6 சதவீதம் உயர்வு என தகவல்

By: Nagaraj Wed, 18 Oct 2023 6:34:17 PM

ஒரு மெட்ரிக் டன் கோதுமை விலை 1.6 சதவீதம் உயர்வு என தகவல்

புதுடில்லி: விலை உயர்வு... கோதுமையின் விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.6% அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி அதிக தேவை, குறைந்தபட்ச வரத்து மற்றும் இறக்குமதி வரி போன்ற காரணங்களால் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அரிசியுடன் கோதுமை முக்கிய உணவாக இருப்பதால், கோதுமை விலை 1.6% அதிகரித்து 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இந்திய விவசாயிகளிடமிருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவர்களால் 26 மில்லியன் டன் கோதுமையை கொள்முதல் செய்ய முடிந்தது.

1.6%,india,metric,price,rise,ton,wheat ,இந்தியா, உயர்வு, கோதுமை, டன், மெட்ரிக், விலை

மேலும், ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால், கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், கோதுமைக்கான 40% இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம், சந்தைக்கு கையிருப்பை கொண்டு வருவதன் மூலம், விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் ஒரு மெட்ரிக் டன் கோதுமையின் விலை ரூ.27,390 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 22% அதிகமாகும். கோதுமை விலை மேலும் உயர்வது உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|
|
|