Advertisement

தொடர்ந்து மழை.. காய்கறிகளின் விலை அனைத்தும் சற்று உயர்வு

By: vaithegi Tue, 26 Sept 2023 5:19:21 PM

தொடர்ந்து மழை..  காய்கறிகளின் விலை அனைத்தும் சற்று உயர்வு

சென்னை: காய்கறிகளின் விலை உயர்வு ... தமிழகத்தில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாகவே லேசான முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் போதுமான காய்கறிகளின் கொள்முதல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

அதாவது, வெங்காயம் கிலோவுக்கு ரூ. 30-க்கும், தக்காளி கிலோவுக்கு ரூ. 12க்கும், நவீன் தக்காளி கிலோவுக்கு ரூ. 15, உருளைக்கிழங்கு ரூ. 28க்கும், ஊட்டி கேரட் கிலோவுக்கு ரூ. 30-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70-க்கும், பெங்களூர் கேரட்டின் விலை கிலோவுக்கு ரூ.10க்கும், பீன்ஸ் கிலோவுக்கு ரூ. 60க்கும், ஊட்டி பீட்ரூட் விலை கிலோவுக்கு ரூ. 30-க்கும், கர்நாடகா பீட்ரூட் கிலோவுக்கு ரூ. 17 க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

price of vegetables,rain ,காய்கறிகளின் விலை,மழை

இதனையடுத்து, பாகற்காய் கிலோ ரூ. 18க்கும், புடலங்காய் ரூ.15 க்கும், சேனைக்கிழங்கு ரூ. 45 க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ. 35க்கும், சேமங்கிழங்கு கிலோ ரூ. 30க்கும், காலிபிளவர் கிலோ ரூ.250க்கும், பட்டாணி கிலோவுக்கு ரூ, 100-க்கும், இஞ்சி கிலோ ரூ.220க்கும், பூண்டு கிலோ ரூ.170 க்கும், வெள்ளை பூசணி ரூ.10 க்கும்,

மேலும் மஞ்சள் பூசணி ரூ. 12க்கும், பீர்க்கங்காய் ரூ. 30க்கும், எலுமிச்சை கிலோவுக்கு ரூ.150 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்து வந்தால் இக்காய்கறிகளின் விலை இன்னும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :