Advertisement

நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏற்றம்

By: vaithegi Sun, 08 Oct 2023 2:22:02 PM

நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏற்றம்


சென்னை: எப்பொழுதும் தக்காளியின் விலை சரிந்த வாங்கிய நாம் கடந்த 2 மாதங்களாக ரூபாய் 250 வரை விலை அதிகரித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது தக்காளியின் விலை குறைந்தாலும், இஞ்சி, மாங்காய், எலுமிச்சை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கு காரணம் பருவநிலை மாற்றம் என்று கூறப்பட்டாலும், இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் அது மட்டுமல்லாமல் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது என்று கூறலாம்.

price of vegetables,essential commodities , காய்கறிகளின் விலை ,அத்தியாவசிய பொருட்கள்

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி சந்தைகளில் தக்காளி ரூபாய் 22, சின்ன வெங்காயம் ரூபாய் 80 , உருளைக்கிழங்கு ரூபாய் 30, கேரட் 40 , பீன்ஸ் ரூபாய் `100, தேங்காய் 30, பீட்ரூட் 48,

மேலும் இஞ்சி 260, மாங்காய் ரூபாய் 70, வெண்டைக்காய் 30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை ஆனது 1 கிலோ அடிப்படையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :