Advertisement

காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி

By: vaithegi Sat, 25 Nov 2023 1:34:11 PM

காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி


சென்னை: தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதனாலும், கார்த்திகை மாதம் துவங்கி விட்ட நிலையிலும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியலை காணலாம்.

அதாவது, அவரைக்காய் கிலோ ரூ.70-க்கும், நெல்லிக்கனி ரூ.102க்கும், மக்காச்சோளம் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ.35க்கும், பாகற்காய் ரூ. 30க்கும், கத்தரிக்காய் ரூ.30-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 10க்கும், குடைமிளகாய் ரூ. 30-க்கும்,

 ,பொதுமக்கள் ,காய்கறிகளின் விலை

மேலும் கேரட் ரூ.35க்கும், காலிஃப்ளவர் ரூ. 36க்கும், கொத்தவரை ரூ. 40-க்கும், தேங்காய் ரூ. 30-க்கும், வெள்ளரிக்காய் ரூ. 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, முருங்கைக்காய் ரூ. 70க்கும், பூண்டு ரூ.180-க்கும், இஞ்சி ரூ.240க்கும், கோவக்காய் ரூ.20க்கும், வெண்டைக்காய் ரூ. 30க்கும், மாங்காய் ரூ. 80க்கும், மரவள்ளிக்கிழங்கு ரூ. 50க்கும், பெரிய வெங்காயம் ரூ. 56க்கும்,

இதனை அடுத்து உருளைக்கிழங்கு ரூ. 30க்கும், முள்ளங்கி ரூ. 30-க்கும், புடலங்காய் ரூ.40க்கும், தக்காளி ரூ. 40-க்கும், வாழைப்பூ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :