Advertisement

பங்குச்சந்தை .. வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடக்கம்

By: vaithegi Tue, 25 Apr 2023 12:49:21 PM

பங்குச்சந்தை   ..  வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடக்கம்

இந்தியா: சென்செக்ஸ் 60,102 புள்ளிகளாக வர்த்தகம் ..... கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகி வந்த பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.இதையடுத்து இன்றைய வர்த்தக நாளில் 60,202 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 46.54 புள்ளிகள் என அதிகரித்து 60,102 புள்ளிகளாக நிலையாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 17.60 புள்ளிகள் அதிகரித்து 17,761 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,056 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,743 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

stock market,trading ,பங்குச்சந்தை   ,வர்த்தகம்

அதைத்தொடர்ந்து பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. நெஸ்லே இந்தியா,

இதனை அடுத்து கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கழகம், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Tags :