Advertisement

கொளுத்துது வெயில்... குவிந்தது தர்பூசணி பழங்கள்; விற்பனை அமோகம்

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:53:47 PM

கொளுத்துது வெயில்... குவிந்தது தர்பூசணி பழங்கள்; விற்பனை அமோகம்

ராமநாதபுரம்: தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்... கோடை காலம் துவங்கியுள்ளதால் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்கள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல் 2வது வாரத்தில் இருந்து கோடை வெயில் உச்சத்தில் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் என மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் 2வது வாரத்தில் இருந்தே வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

fruits,ramanathapuram,sale,watermelon, ,தர்ப்பூசணி, பழங்கள், ராமநாதபுரம், விற்பனை

ராமநாதபுரத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பாரதி நகர், பட்டணம்காத்தான், அரண்மனை ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என பல்வேறு இடங்களில் தண்ணீர் பழம் என்று சொல்லக்கூடிய தர்பூசணிகள் விற்பனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த தர்பூசணி பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதாலும், தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதாலும், குழந்தைகளுக்கு கொடுக்க மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பழங்களை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, கோடை காலத்தை முன்னிட்டு தர்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Tags :
|
|