Advertisement

ட்வீட்டர் பதிவுக்கான வரம்பு 10,000 எழுத்துக்கள் வரை உயர்வு

By: vaithegi Mon, 06 Mar 2023 6:13:56 PM

ட்வீட்டர் பதிவுக்கான வரம்பு 10,000 எழுத்துக்கள் வரை உயர்வு

இந்தியா:ட்வீட்டர் பதிவுக்கான வரம்பு 10,000 எழுத்துக்கள் வரை அதிகரித்துள்ளதாக எலான் அறிவிப்பு ... ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டரில் பதிவு செய்யப்படும் ட்விட்டுகளுக்கான எழுத்துகளின் வரம்பை 10,000 ஆக மாற்றி அறிவித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளையும் மற்றும் புதிய அம்சங்களையும் வெளிட்டு கொண்டு வருகிறார்.

letters,twitter ,எழுத்துக்கள் ,ட்வீட்டர்


அந்த வகையில் தற்பொழுது பயனர்களுக்கு உதவும் வகையில் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் ட்விட்டுகளுக்கான எழுத்துகளின் வரம்பை 10,000 ஆக மாற்றியுள்ளார்.

இதனால் ட்விட்டர் பயனர்கள் இணையதளம் மற்றும் செயலியில் மிக நீண்ட ட்வீட்களை பதிவிட முடியும்.இதையடுத்து தற்பொழுது ட்விட்டர் பயனர்கள் 280 எழுத்துக்கள் வரை மட்டுமே ட்வீட்களை பதிவிட முடியும்.

ட்விட்டர் ப்ளூ உறுப்பினர்கள் மட்டுமே தற்பொழுது இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். அவர்கள் 4000 எழுத்துக்கள் வரை தங்களது பதிவுகளை ட்வீட் செய்யலாம். இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் விதமாக வெளிவிடப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags :