Advertisement

போரின் எதிரொலி .. கச்சா எண்ணெய்யின் விலை மேலும் உயர கூடும் அபாயம்

By: vaithegi Thu, 12 Oct 2023 4:58:09 PM

போரின் எதிரொலி  .. கச்சா எண்ணெய்யின் விலை மேலும் உயர கூடும் அபாயம்

சென்னை:சிலிண்டர், பெட்ரோல் & டீசல் விலை உயர வாய்ப்பு . கடந்த வருடம் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் அதன் விளைவுகளில் இருந்து மீள முடியாமல் பல நாடுகள் தவித்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் நாடுகளுக்கு இடையே ராணுவ தாக்குதல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5வது நாளாக நடக்கும் இந்த போரில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

war repercussion,crude oil,cylinder,petrol & diesel prices ,போரின் எதிரொலி, கச்சா எண்ணெய்,சிலிண்டர், பெட்ரோல் & டீசல் விலை

இதனால் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கச்சா எண்ணையின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரின் விளைவால் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இந்த லையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் சக்தி துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Tags :