Advertisement

கடந்த சனிக்கிழமைகளில் இருந்து தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

By: vaithegi Mon, 19 June 2023 2:55:25 PM

கடந்த சனிக்கிழமைகளில் இருந்து தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

சென்னை: தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரனுக்கு 48,144 ரூபாய்க்கு விற்பனை .... கடந்த வாரம் முழுவதுமே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அதிகளவிலான தாய்மார்கள் நகை வாங்குவதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், வார இறுதி நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்திருக்கிறது.

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6018 ரூபாய்க்கும், சவரனுக்கு 48,144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold price,chennai , தங்கத்தின் விலை,சென்னை

இதனையடுத்து , பங்கு சந்தை நிலவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லாத காரணத்தினால் இன்றும் சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6018 ரூபாய்க்கும், சவரனுக்கு 48,144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 78.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 20 காசுகள் உயர்ந்து 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :