Advertisement

கடந்த மே 22ம் தேதி முதல் இதுவரை வரை பெட்ரோல் ,டீசல் விலை எவ்வித மாற்றமில்லை .. காரணம்

By: vaithegi Sun, 26 Mar 2023 12:52:44 PM

கடந்த மே 22ம் தேதி முதல் இதுவரை வரை பெட்ரோல் ,டீசல் விலை எவ்வித மாற்றமில்லை ..  காரணம்

இந்தியா: நாட்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்தாண்டு ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர், 5 மாநிலங்களில் தேர்தல் போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் ரூ.110.85க்கும் , டீசல் ரூ.100.94க்கும் என்று கிடுகிடுவென உயர்ந்தது.

இதனை அடுத்து இந்த விலை உயர்வு கடந்த மே 21ம் தேதி வரை மாற்றமின்றி இருந்தது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரி குறைக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

petrol,diesel ,பெட்ரோல் ,டீசல்

எனவே பெட்ரோல் ரூ.8.22 குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி அன்று முதல் இன்று வரை இந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த 20220-ம் ஆண்டு மே 22-ம் தேதி முதல் இன்று வரை என மொத்தமாக 309வது நாளாக பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|