Advertisement

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்ரோல், டீசலின் விலை மாற்றம் இல்லை

By: vaithegi Mon, 25 Sept 2023 3:39:41 PM

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்ரோல், டீசலின் விலை மாற்றம் இல்லை

சென்னை: இந்தியா கச்சா எண்ணெய்யை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பில் இருந்து இறக்குமதி செய்து கொண்டு வருகிறது. இந்த, கச்சா எண்ணையின் இறக்குமதி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT), சரக்கு கட்டணம், உள்ளூர் வரி போன்றவற்றை பொறுத்தே உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

petrol,diesel,sales , பெட்ரோல், டீசல்,விற்பனை

இதன் பின், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது. அதாவது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையடுத்து தற்போது வரையிலும் 492வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டில் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதையடுத்து பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags :
|
|