Advertisement

கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லை

By: vaithegi Tue, 12 Sept 2023 3:54:00 PM

கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லை


சென்னை: இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் ...உள்நாட்டில் கச்சா எண்ணையின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த 2021 -ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை திடீரென உயர்த்தப்பட்டு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.110.82க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 102.59 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது.

price of petrol and diesel ,பெட்ரோல், டீசலின் விலை

இதையடுத்து அதன் அடிப்படையில், பெட்ரோல் விலை ரூ. 9 குறைந்து ரூ. 102.63 க்கும், டீசலின் விலை ரூ.7.50 குறைந்து ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகியும் தற்போது வரையிலும் பெட்ரோல், டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைப் போன்று, இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு இடையே, மத்திய அரசு சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைத்திருக்கும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Tags :