Advertisement

இன்று பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லை

By: vaithegi Tue, 24 Oct 2023 4:05:16 PM

இன்று பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லை

சென்னை: இன்று 521வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை ..சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் ஏற்ற இறக்கம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிப்பு கூட்டப்பட்ட வரி, சரக்கு கட்டணம் உள்ளூர் வரி உள்ளிட்ட பல்வேறு காரணத்தினால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றங்களை செய்து வருகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல் இருந்துகொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.102.59 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இதன் பின், கலால் வரி அடிப்படையில் மீண்டும் பெட்ரோல், டீசலின் விலை சற்று குறைக்கப்பட்டது.

price of petrol,diesel,oil , பெட்ரோல், டீசலின் விலை,எண்ணெய்

இதன் பின்னர், தற்போது வரையிலும் 521வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, சென்னையில் 521வது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு இடையே, அடுத்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதை போன்று பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

Tags :
|