Advertisement

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் கிடையாது; மத்திய அமைச்சர் தகவல்

By: Nagaraj Fri, 12 June 2020 8:14:52 PM

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் கிடையாது; மத்திய அமைச்சர் தகவல்

அபராதம் கிடையாது... சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால், அதற்காக அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

fines,gst,accounting,union minister ,அபராதம், ஜிஎஸ்டி, கணக்குதாக்கல், மத்திய அமைச்சர்

கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜூலை மாதம் 2017 - ஜனவரி 2020 வரை ஏராளமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. அவர்கள் வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால், ஜிஎஸ்டி வரி தாக்கலில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது.

இந்தக் காலக்கட்டத்தில் வரி செலுத்துவதிலும் நிலுவை இருந்து, அத்துடன் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரை ஜிஎஸ்டி வரி கணக்குத்தாக்கல் செய்வோருக்கு பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|