Advertisement

இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹520 அதிகரிப்பு

By: vaithegi Fri, 17 Nov 2023 11:01:29 AM

இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹520 அதிகரிப்பு


சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது.

இதனை அடுத்து நேற்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 45,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,635க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,sale,gram ,தங்கம் விலை,விற்பனை ,கிராம்

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மட்டும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. சென்னையில் 1 சவரன் ஆபரண தங்கம் ரூ.45,600க்கு விற்பனையாகிறது. 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.65 அதிகரித்து ரூ.5,700 ஆக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.50காசுகள் அதிகரித்து ரூ.79 50 காசுகளுக்கு விற்பனை ஆகி கொண்டு வருகிறது.

Tags :
|