Advertisement

இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது

By: vaithegi Mon, 31 July 2023 3:01:21 PM

இன்று தங்கம்  விலை சவரனுக்கு  120 ரூபாய் குறைந்தது

சென்னை: சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாய் குறைந்துள்ளது ...உள்நாட்டில் பங்குச்சந்தையின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்தே தங்கத்தின் விலை தீர்மானம் செய்யப்படுகிறது.

இதையடுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து வருகிறது. ஒரு நாள் குறைவதும், ஒரு நாள் உயர்வதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை கடந்த வாரங்களில் அதிரடியாக அதிகரித்தது. கடந்த சனிக்கிழமையன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,520க்கும், ஒரு கிராம் ரூ.5,565க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது.

gold price,sawaran , தங்கம்  விலை ,சவரன்

இதனை அடுத்து வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் 1 சவரன் ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,550க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி சில்லறை விற்பனையில் 1 கிராம் ரூ.80க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :