Advertisement

இன்று இதன் விலை திடீர் சரிவு

By: vaithegi Tue, 20 Dec 2022 1:27:49 PM

இன்று இதன் விலை திடீர் சரிவு

சென்னை: தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது ... இந்தியாவில் எப்போதும் தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். மற்ற நாடுகளை பொறுத்த வரை தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் தங்கம் என்பது ஒரு வகையான கலாச்சார வழக்கமாக உள்ளது.

வட மற்றும் தென்னிந்திய பெண்கள் தங்கத்தால் ஆன அணிகலன்களை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுவர். அதிலும் பெண்கள் திருமணம் என்றால் முதலில் அவர்கள் வாங்குவது தங்க நகைகள் தான். இந்தியாவில் தங்கத்தின் விற்பனை எப்போதும் அதிகமாக தான் இருக்கும். அதே சமயம் கடந்த 2 வருடங்களாக தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து கொண்டே வருகிறது.

price,gold ,விலை ,தங்கம்

இதையடுத்து இந்த நிலையில் தங்க அணிகலன்கள் வாங்குவது பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நேரத்தில் பெண்கள் நகைப்பிரியர்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்த வகையில் இருக்கின்றனர்.

இதனை அடுத்து அவர்களுக்கு ஏற்றுவாறு இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது. எனவே அதன் படி ஒரு சவரன் ரூபாய் 40,520 க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 5 குறைந்து ரூ. 5,065க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 60 காசுகள் சரிந்துள்ளது தற்போது ஒரு கிராம் 72.50 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 72500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|