Advertisement

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616-க்கு விற்பனைbb

By: vaithegi Tue, 04 July 2023 10:53:28 AM

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616-க்கு விற்பனைbb

சென்னை: சென்னையில் கடந்த மாதம் ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் விலை, இந்த மாதத்தின் முதல் நாளான கடந்த சனிக்கிழமை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் குறைந்தது.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து 1 கிராம் 5435 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து 1 சவரன் ரூ.43,480 ஆகவும் விற்பனையானது. இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

price of jewelery gold,silver , ஆபரணத் தங்கத்தின் விலை ,வெள்ளி

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.43,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து 1 கிராம் தங்கம் ரூ.17 உயர்ந்து ரூ.5,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை 1 கிராமிற்கு 30 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.80 ஆகவும், கட்டி வெள்ளி 1 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.75,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :