Advertisement

மாதத்தின் தொடக்க நாளான இன்று இதன் விலை அதிகரிப்பு

By: vaithegi Thu, 01 Dec 2022 2:38:53 PM

மாதத்தின் தொடக்க நாளான இன்று இதன் விலை அதிகரிப்பு

இந்தியா: இன்று விலை அதிகரிப்பு .... இந்தியாவில் தங்கம் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மேலை நாடுகளை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் தங்கத்தால் ஆன அணிகலன்களை அணிவது கலாச்சார வழக்கமாக உள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து இந்நிலையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை திடீரென உயர்த்தியது. இதனால் ஆபரணத்தங்கத்தின் விலை மக்கள் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது.

price of jewelery increased ,ஆபரணத்தங்கத்தின் விலை,அதிகரிப்பு

அதை தொடர்ந்து தற்போது பங்கு சந்தையில் நிப்டி புள்ளிகள் அதிகரித்து வருவதை அடுத்து தங்கத்தின் மீதான முதலீடும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.152 உயர்ந்து ரூ.39,640-க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 19 உயர்ந்து ரூ.4,955-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.1.80 காசுகள் அதிகரித்து ரூ.69.80 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தாக ஒரு கிலோ வெள்ளி ரூ.1,800 அதிகரித்து ரூ.69,800 ஆக விற்பனையாகி வருகிறது.

Tags :