Advertisement

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ஏற்றம்

By: vaithegi Mon, 06 Feb 2023 11:17:36 AM

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ஏற்றம்

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.720 குறைந்தது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமையும், சவரனுக்கு ரூ, 640 குறைந்து ஒரு சவரன் ரூ. 42,680 குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335க்கு விற்கப்பட்டது.

இதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியிருக்கிறது.

gold,chennai ,தங்கம் ,சென்னை

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,365க்கு விற்கப்படுகிறது.

மேலும் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.74க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 74 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|