Advertisement

இன்று ஒரேடியாக சரிந்த தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 10 Aug 2023 11:54:37 AM

இன்று ஒரேடியாக சரிந்த தங்கத்தின் விலை

சென்னை: தமிழகத்தில் இன்று24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47, 800க்கு விற்பனை ...தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சற்று குறைந்து கொண்டு வருகிறது.

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6000-க்கும், சவரனுக்கு ரூ. 48,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது.

gold price,sale ,தங்கத்தின் விலை ,விற்பனை

அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.5975க்கும், சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.47, 800 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வார இறுதி நாட்களில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பு உள்ளதால் தற்போதே நகை வாங்குவதற்கு நகை பிரியர்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.76.70 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :