Advertisement

இன்று அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை

By: vaithegi Mon, 10 July 2023 11:45:25 AM

இன்று அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை

சென்னை: இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் முழுவதுமே எதிர்பாராத வகையில் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில், தற்போது ஜூலை மாத துவக்கத்திலிருந்து மீண்டும் தங்கத்தின் விலை உயர துவங்கி விட்டது.

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.5955க்கும், சவரனுக்கு ரூ.47640க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5475 ரூபாய்க்கும், சவரனுக்கு 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,sale ,தங்கத்தின் விலை ,விற்பனை

இதையடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5945 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 47,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.76.70 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 பைசா அதிகரித்து 76.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை மீண்டும் குறைய துவங்கியுள்ளதால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags :