Advertisement

இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு

By: vaithegi Fri, 25 Aug 2023 1:08:34 PM

இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு

சென்னை: வரலட்சுமி நோன்பை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் திடீரென தங்கத்தின் விலை இன்று குறைந்திருக்கிறது.உள்நாட்டில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாகவே அக்ஷய திருதியை, திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகிய தினங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்படுகிறது.

இதையடுத்து இன்று வரலட்சுமி நோன்பு என்பதால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5950க்கும், சவரனுக்கு ரூ.47,600 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5480 க்கும், சவரனுக்கு 43,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

jewelery gold price,festivals ,ஆபரண தங்கத்தின் விலை ,பண்டிகைகள்


இதை தொடர்ந்து, தங்கத்தின் விலை இன்று உயரும் என எதிர்பார்த்த சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ.5945க்கும், சவரனுக்கு ரூ. 40 குறைந்து 47, 560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 22 ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5470 க்கும், சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.43,800 க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது. மேலும், நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :