Advertisement

இன்று சின்ன வெங்காயத்தின் விலை சரிவை கண்டுள்ளது

By: vaithegi Sun, 13 Aug 2023 5:05:01 PM

இன்று சின்ன வெங்காயத்தின் விலை சரிவை கண்டுள்ளது

சென்னை: கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை பெட்ரோல் விலைக்கு போட்டியாக விற்கப்பட்டு வந்தது. வெளிமாநிலங்களில் தக்காளி வரத்து குறைவாக இருந்ததாலும், மழை காரணமாகவும், தக்காளி விலை பெரும் உச்சத்தில் விற்கப்பட்டது. அதேபோன்று, சின்ன வெங்காயத்தின் விளையும் அதற்கு இணையாக அதிகரித்தது.

இதனை அடுத்து தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று விலை சரிந்தது. எனவே அதன்படி, இன்று சின்ன வெங்காயம் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது.

onion,tomato ,சின்ன வெங்காயம்,தக்காளி

அந்த வகையில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் இதே சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது.

பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி, ரூ.45- 50க்கு விற்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்து உள்ளது. இப்பொது, தக்காளியின் விலையை விட சின்ன வெங்காயத்தின் விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|