Advertisement

இன்று தங்கத்தின் விலை குறைவினால் பொதுமக்கள் சற்று நிம்மதி

By: vaithegi Tue, 25 July 2023 12:17:28 PM

இன்று தங்கத்தின் விலை குறைவினால் பொதுமக்கள் சற்று நிம்மதி

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை ... எளியவர்கள் முதல் வசதியானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் சுபகாரிய நாட்களில் தங்கம் வாங்க வேண்டிது உள்ளது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையானது தினசரி மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் மக்களை நேரடியாக பாதிப்பதால் தங்கத்தின் விலை குறித்து மக்கள் ஆர்வம் காட்டி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 44280 ஆக விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

public,the price of gold ,பொதுமக்கள் , தங்கத்தின் விலை

மேலும் 1 கிராம் ₹ 5535 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 24 கேரட் ஆபரணத் தங்கம் 1 சவரன் 48016 ரூபாய்க்கும் 1 கிராம் 6002 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் வெள்ளியின் விலை சில்லறை விற்பனையில் 1 கிராம் ரூபாய் 80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை ஆனது இன்று சற்று குறைந்துள்ளது.


Tags :
|