Advertisement

இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை பற்றி பார்ப்போம்

By: vaithegi Sun, 20 Aug 2023 1:38:36 PM

இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை பற்றி பார்ப்போம்

சென்னை: பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி பொன்றவற்றை பொருத்து தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் தங்கத்தின் விலை சற்றென்று உயர்ந்து விடும்.

ஆனால், தற்போது வழக்கத்திற்கும் மாறாக ஆடி மாதம் முடிவடைந்து முகூர்த்த நாட்கள் துவங்கியுள்ள நிலையிலும் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ.5920 க்கும், சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.47,360 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,stock market,mukurd days ,தங்கத்தின் விலை ,பங்குச்சந்தை,முகூர்த்த நாட்கள்

இந்த நிலையில் இன்று வளர்பிறை முகூர்த்த நாள் என்பதனால் தாறுமாறாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று நகைப் பிரியர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5920 க்கும், சவரனுக்கு ரூ.47,360 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.5450க்கும், சவரனுக்கு ரூ.43,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 76.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags :