Advertisement

ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Sun, 30 July 2023 11:49:46 AM

ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தங்கத்தின் விலை ஆனது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் உலக மார்க்கெட்டில் தங்கத்தின் தேவை பற்றியும் விலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து கடந்தாண்டு முதல் தங்கத்தின் விலை ஆனது இதுவரை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது. நாள்தோறும் புதிய உச்சம் என்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

gold price,world market ,தங்கத்தின் விலை,உலக மார்க்கெட்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று வணிக சந்தையின் விடுமுறை நாள் என்பதால் தங்கம் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.எனவே அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.5565 க்கும், 1 சவரன் நகை ரூ.44,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 6032 க்கும், 1 சவரன் ரூபாய் 48,256க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் 1கிராம் ரூபாய் 80க்கும், 1கிலோ 80,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :