Advertisement

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை

By: vaithegi Sun, 26 Nov 2023 3:59:51 PM

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது கடந்த சில வாரங்களாகவே அதிரடி விலை மாற்றங்களை அடைந்து கொண்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது சனிக்கிழமை அதிரடியாக 1 கிராமிற்கு ரூபாய் ரூ.20 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை விலையிலேயே ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold,silver,sale ,தங்கம் ,வெள்ளி, விற்பனை


எனவே அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46,040க்கும், ஒரு கிராம் ரூபாய் 5755க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் 24 கேரட் தங்கம் 1 சவரன் ரூ. 49,800 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6225 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் 1 கிராம் ரூபாய் 80.20க்கும், 1 கிலோ ரூபாய் 80,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|