Advertisement

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை

By: vaithegi Wed, 10 Aug 2022 12:01:38 PM

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை:சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே திடீரென குறைவதும், அதிரடியாய் உயர்வதுமாய் இருந்து வருகிறது. அதாவது, நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி மாற்றத்தினாலும் தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய காரணத்தினால் சவரனுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரைக்கும் விலை உயர்த்தப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ரூ.160 வரைக்கும் குறைந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,880 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

aparana gold,chennai ,ஆபரண தங்கம்,சென்னை

நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.104 உயர்ந்து ரூ.39,144 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.13 உயர்ந்து ரூ.4,893க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 காசுகள் குறைந்து ரூ.64.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :