Advertisement

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Wed, 14 Sept 2022 12:01:05 PM

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold price,chennai ,தங்கம் விலை ,சென்னை

கடந்த 2 நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்தது. எனவே அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்தது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.4,725-க்கு விற்பனையானது.

இதை அடுத்து அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. அதனால் சாமானிய மக்கள் இன்றே தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.24 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,701க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதே போன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.192 குறைந்து ரூ.37,608க்கும் விற்பனையாகிறது. அத்துடன் சென்னையில் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.61.80க்கும் அத்துடன் 1 கிலோ வெள்ளி ரூ.61,800க்கும் விற்பனையாகிறது

Tags :