Advertisement

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Sat, 09 July 2022 12:54:23 PM

சென்னையில் இன்றைய  ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 13 ரூபாயும், சவரனுக்கு 104 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,676க்கும், சவரன் ரூ.37,408க்கும் விற்கப்பட்டது.

ஆனால் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13 உயர்ந்து, ரூ 4,689 ஆகவும், சவரனுக்கு ரூ.104 ஏற்றம் கண்டு ரூ.37,512க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து வருகிறது. கடந்த 6,7 தேதிகளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1064 குறைந்தது. சவரன் ரூ.38 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை திடீரென ரூ37 ஆயிரத்துக்கு குறைந்தது.

gold price,chennai ,தங்கம் விலை ,சென்னை

கடந்த 2 நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கினாலும், இன்னும் சவரன் ரூ.38 ஆயிரத்தை எட்டவில்லை. மேலும் வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது.

மேலும் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசு அதிகரித்து ரூ.62.80க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.62. 800 காசுக்கு விற்கப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளி விலை ரூ.400 உயர்ந்துள்ளது.

Tags :