Advertisement

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Mon, 18 July 2022 12:59:35 PM

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: கடந்த சில நாட்களாக திடீரென தங்கத்தின் விலை குறைவதும் பின்பு அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்வதுமாய் இருந்து டி கொண்டிருக்கிறது. இதனிடையே, தங்கத்தின் விலை குறையுமா என தாய்மார்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நேற்றைய விலையை காட்டிலும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 37,016 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,627 க்கு விற்பனையானது மற்றும் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.60.70 க்கு விற்பனை செய்யப்பட்டது.

chennai,gold price ,சென்னை,தங்கத்தின் விலை

நேற்றைய ஆபரணத் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 37,176 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 20 உயர்ந்து ரூ.4,647 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.61.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :