Advertisement

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Mon, 19 Sept 2022 11:44:31 AM

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37 ஆயிரத்து 056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து 4ஆயிரத்து 632-க்கு விற்பனை ஆகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,632ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதைபோன்று வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. விலை தொடர்ந்து குறைந்து பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :