Advertisement

சென்னையில் இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 11 Aug 2022 12:44:37 PM

சென்னையில் இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னை: இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நடைபெற்றது. இதன் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது இந்த மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ.38,360க்கும் ஒரு கிராம் ரூ.4,795 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

chennai,gold price ,சென்னை,தங்கத்தின் விலை

அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.

இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 38,880-க்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது. அதே போன்று ஒரு கிராம் தங்கம் ரூ.33 குறைந்து ரூ.4,860 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.64.00 க்கும், ஒரு கிலோ 64,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags :