Advertisement

இன்றைய ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Mon, 13 June 2022 1:03:35 PM

இன்றைய ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவகிறது. அதனை தொடர்ந்து இன்றும் தங்க அதிரடியாக உயர்ந்து உள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஆனால், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருவதால் இனி தங்கம் வாங்க முடியாத சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், கடந்த ஜூன் 8 ஆம் தேதியில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்தபடியே தான் இருக்கிறது. கடந்த ஜூன் 8 ஆம் தேதியில் மட்டுமே சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38,160 விற்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்பு, மேலும், ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.ரூ.38,360க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்பு, அடுத்தடுத்து தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

நேற்று ஒரேடியாக ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு மட்டுமே ரூ. ரூ.60 அதிகரித்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.38,680-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ.4,835-க்கு விற்பனையாகி வந்தது. தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய தங்கத்தின் விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :