Advertisement

இன்றைய (அக்.3) காய்கறி விலை நிலவரம்

By: vaithegi Tue, 03 Oct 2023 1:13:16 PM

இன்றைய (அக்.3) காய்கறி விலை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான காய்கறி விலையானது ஜூன், ஜூலை மாதங்களில் பெரும் உச்சம் தொட்டது. அதனால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக தக்காளி விலையானது எதிர்பாராத உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இம்மாதம் காய்கறி விலையானது சற்று குறைந்து இருக்கிறது.

vegetable,price,sale ,காய்கறி ,விலை ,விற்பனை

புரட்டாசி மாதம் பலர் அசைவம் சாப்பிடமாட்டார்கள். அந்த வகையில் இம்மாதம் காய்கறி விலையும் குறைந்து இருப்பதால் மக்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர். எனவே அதன் படி இன்று (அக். 3) காய்கறி விலை பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து அதில், தக்காளி கிலோ ரூ.20க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ. 65க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.30க்கும்,கேரட் கிலோ ரூ. 40க்கும், பீன்ஸ் கிலோ ரூ.70க்கும், தேங்காய் கிலோ ரூ.30க்கும், பீட்ரூட் கிலோ ரூ.50க்கும், இஞ்சி கிலோ ரூ.280க்கும், மாங்காய் கிலோ ரூ.70க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ. 15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|