Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவர பட்டியல் வெளியீடு

By: vaithegi Sun, 20 Aug 2023 1:42:03 PM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவர பட்டியல் வெளியீடு

சென்னை: 456 வது நாளாக பெட்ரோல், டீசலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்றும் அதே விலையில் விற்பனை .... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் உள்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த 2021 -ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. அதாவது, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 110.82 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 102.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலின் விலை உயர்வினால் வாகன ஓட்டுகளின் மத்தியில் பெரும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

petrol,diesel price,sale ,பெட்ரோல், டீசல் விலை,விற்பனை

இதன் பின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் விலை குறைக்கப்பட்டது. அதாவது, பெட்ரோல் மீதான கலால் வரி அடிப்படையில் ரூ. 9 குறைந்து ரூ. 102.63 ஆகவும், டீசல் மிதான கலால்வரி அடிப்படையில் லிட்டருக்கு ரூ. 7.50 குறைந்து ரூ. 94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்போது வரையும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, சென்னையில் 456- வது நாளாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 102.63 க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|