Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

By: vaithegi Thu, 16 June 2022 08:47:58 AM

இன்றைய  பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வின்றி விற்பனையானது. 40 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.

petrol,diesel,motor vehicle,crude oil , பெட்ரோல், டீசல்,வாகன ஓட்டி,கச்சா எண்ணெய்

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து, மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 26 வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102ரூபாய் 63பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக விற்பனையாகி வருகிறது.பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயராதது மன நிம்மதியை அளித்தாலும் மேலும்,பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவற்றின் உற்பத்தி கூடுதலாக உள்ளது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Tags :
|
|