Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By: vaithegi Fri, 14 Apr 2023 2:14:51 PM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: இன்றைய பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த விலை நிலவரத்தை இப்பதிவின் மூலம் அறியலாம்.

சர்வதேச பங்கு சந்தையின் ஏற்ற, இறக்கத்தை பொறுத்து தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனை அடுத்து பெட்ரோல், டீசல் விலையானது உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக மிகவும் பாதிப்பை சந்தித்தது. அதன் பின் விலையில் ஏற்றம் இறக்கம் என்பது மாறுபட்டுக் கொண்டிருந்தது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

இந்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் தொடர்ந்து 328-வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags :
|