Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By: vaithegi Sun, 16 Apr 2023 10:51:04 AM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: 331-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 30 அல்லது 0.45% அதிகரித்து ரூ.6,765 ஆக உள்ளது. ஆனால், 11 மாதங்கள் ஆன போதிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

331-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :
|