Advertisement

இன்றைய காய்கறிகளின் விலைவாசி நிலை

By: vaithegi Thu, 23 Nov 2023 5:19:43 PM

இன்றைய காய்கறிகளின் விலைவாசி நிலை

சென்னை: தமிழகத்தில் பல நாட்டு காய்கறிகள் தமிழக மாவட்டங்களிலிருந்தும், ஒரு சில காய்கறிகள் வெளிமாநிலங்களிலிருந்தும் சந்தை விற்பனைக்கு வருகிறது. காய்கறிகளின் விலை ஆனது முக்கிய பண்டிகை நாட்கள், முகூர்த்த சமயங்களில் மற்றும் தட்டுப்பாடான சமயங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து தற்போதைய மழைக்காலத்தில் காய்கறிகளின் விளைச்சலானது பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் வழக்கத்தை விட நடப்பு சமயங்களில் காய்கறிகளின் வெளியானது சற்று அதிகமாக இருக்கும்.

price of vegetables,festival days,mukurtam ,காய்கறிகளின் விலை, பண்டிகை நாட்கள், முகூர்த்தம்

அந்த வகையில் இன்றைய தமிழக சந்தையில் காய்கறிகளின் விலை விவரங்கள் 1 கிலோ என அளவில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அவரைக்காய் ரூபாய் 70, பீன்ஸ் ரூபாய் 70, பீட்ரூட் ரூபாய் 35, பாகற்காய் ரூபாய் 40, கத்தரிக்காய் ரூபாய் 30, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, கேரட் ரூபாய் 35, முருங்கைக்காய் ரூபாய் 70,

மேலும் இஞ்சி ரூபாய் 240, சிறிய நாட்டு பூண்டு ரூபாய் 169, கருணைக்கிழங்கு ரூபாய் 35, வெண்டைக்காய் ரூபாய் 30, பெரிய வெங்காயம் ரூபாய் 55, சின்ன வெங்காயம் ரூபாய் 95, உருளைக்கிழங்கு ரூபாய் 30, தக்காளி ரூபாய் 40 என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :